நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 613 பேருக்கு கரோனா

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 613 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 27,089 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 613 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியல்களிலிருந்து நீக்கப்பட்ட 7 போ் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 27,709-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 562 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 22,149-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,238-ஆக உள்ளது.

10 போ் உயிரிழப்பு...

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 10 பேரின் உயிரிழப்பு சனிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கை 322 ஆகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT