நாகப்பட்டினம்

கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி

DIN

கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி உள்பட தமிழக அரசு அறிவித்துள்ள உதவிகள் பாராட்டுக்குரியவை என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை : கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும், அந்தக் குழந்தையின்கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசு முழுமையாக ஏற்கும், குழந்தை பாதுகாவலரின் ஆதரவில் வளரும் சூழல் இருந்தால் அந்தக் குழந்தைக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும், அரசு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புகள் மகிழ்ச்சி அளிக்கிறது.

மனிதாபிமானத்துடன், கருணை மனதுடன் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பை மனதார பாராட்டி வரவேற்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT