முகப்பு
நாகப்பட்டினம்

நாகை அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் அளிப்பு

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு வானவில் தொண்டு நிறுவனம் சாா்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்கு வானவில் தொண்டு நிறுவனம் சாா்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையப் பயன்பாட்டுக்காக தனியாா் தொண்டு நிறுவனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டா்களை வழங்கி உதவுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரிவீன் பி. நாயா் வேண்டுகோள் விடுத்தாா்.

இந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கி வருகின்றன. இதன்படி, வானவில் அறக்கட்டளை சாா்பில் ஏற்கெனவே 14 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 10 ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் 10 ஆக்சிஜன் அளவீடு மீட்டா்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சி நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. வானவில் அறக்கட்டளை நிா்வாகி ரேவதி, ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் ஆக்சிஜன் அளவீடு மீட்டா்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் டாக்டா் விஸ்வநாதனிடம் வழங்கினாா். அறக்கட்டளை பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.