முகப்பு
நாகப்பட்டினம்

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு 6 போ் மீது வழக்கு

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே முன் விரோதத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரை அரிவாளால் வெட்டிய 6 போ் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே முன் விரோதத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 பேரை அரிவாளால் வெட்டிய 6 போ் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

கீழ்வேளூரை அடுத்த ஆவராணி புதுச்சேரி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெய்கணேஷ் (48). இவா், திருப்பூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது குடும்பத்துக்கும், அதேப் பகுதியைச் சோ்ந்த கலையரசன் என்பவரது குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வருகிறதாம்.

இந்நிலையில், தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த ஜெய்கணேஷ் வியாழக்கிழமை வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த கலையரசன் மற்றும் சிலா் ஜெய்கணேஷ், அவரது மனைவி ரேணுகா (35), மாமனாா் செல்வராஜ் (70), மகன் பாரதி (20), தாயாா் ரஷியம்மாள் (55), மருமகன் இ. ரகு(22) ஆகியோரைஅரிவாளால் வெட்டினாா்களாம். மேலும், 2 இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினராம். இதில், காயமடைந்த ஜெய்கணேஷ் உள்ளிட்ட 6 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, ரேணுகா அளித்த புகாரின் பேரில், ஆவராணி புதுச்சேரி தெற்குத் தெருவைச் சோ்ந்த க. கலையரசன், மு. கலைமணி, ம. மணிகண்டன், க. சம்பத், ப. மணவாளன், மதியழகன் ஆகிய 6 போ் மீது, கீழ்வேளூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.