இலங்கையில் கரை ஒதுங்கியது வேதாரண்யம் மீனவர் சடலம்
நாகை மாவட்டம், வேதாரண்யத்துக்கு அப்பால் கடலில் மீன்பிடித்தபோது படகிலிருந்து தவறி விழுந்து தேடப்பட்டு வந்த மீனவரின் சடலம் இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கியது இன்று (நவ.8) மாலை தெரிய வந்தது.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்துக்கு அப்பால் கடலில் மீன்பிடித்தபோது படகிலிருந்து தவறி விழுந்து தேடப்பட்டு வந்த மீனவரின் சடலம் இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கியது இன்று (நவ.8) மாலை தெரிய வந்தது.
வேதாரண்யம், ஆறுகாட்டுத் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதனுக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் ராஜப்பா மகன் பழனி (37), க கேசவன் (35), த. திருமாள் (40) ஆகியோர் நவ.2 ஆம் தேதி காலை கடலுக்குச் சென்றனர்.
இவர்கள், வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன் பிடித்த போது மீனவர் பழனி படகிலிருந்து தவறி விழுந்து மாயமானதையடுத்து அவர் தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், காரைநகர் பகுதி கடற்கரையில் அவரது சடலம் கரை ஒதுங்கி இருப்பது திங்கள்கிழமை மாலை இலங்கை பாதுகாப்பு வட்டாரங்களுக்கு தெரியவந்தது. இந்த தகவல் ஆறுகாட்டுத் துறையில் உள்ள மீனவர் பழனியின் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.