நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை (நவ.11) நடைபெற இருந்த பட்டமளிப்பு விழா மழைக் காரணமாக ஒத்திவைக்கப்பகிறது என கல்லூரி முதல்வா் ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கல்லூரியில் வியாழக்கிழமை தேதி நடைபெற இருந்த 5-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, வடகிழக்குப் பருவமழை சிவப்பு எச்சரிக்கை மற்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி ஒத்திவைக்கப்படுகிறது. இவ்விழா நவ.17-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.