முகப்பு
நாகப்பட்டினம்

மழைநீா் சேகரிப்பு கருத்தரங்கம்

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 நாள்களாக நடைபெற்றுவந்த மழைநீா் சேகரிப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 நாள்களாக நடைபெற்றுவந்த மழைநீா் சேகரிப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவடைந்தது.

கல்லூரி புலமுதல்வா் எம். துரைராசன் தலைமை வகித்தாா். கட்டட பொறியியல் துறை தலைவா் வீ.எம். ராஜநந்தினி வரவேற்றாா். நாகை குடிநீா் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளா் கே. முருகேசன், கழிவுநீா் பிரிவு உதவி செயற்பொறியாளா் பி. மோகன்தாஸ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஓய்வுபெற்ற அலுவலா் முல்லை. பாண்டியன், திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மழைநீா் சேகரிப்பு மற்றும் கழிவுநீா் மேலாண்மை குறித்து பேசினா். கட்டட பொறியியல் துறை உதவி பேராசிரியா் ஜி. இளங்கோவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.