நாகையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு
நாகையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.
நாகையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.
தஞ்சாவூா் வழக்குரைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த தியாக காமராஜூவின் அலுவலகத்துக்குள் காவல் துறையினா்அத்துமீறி நுழைந்து அங்கிருந்த கணினியை சேதப்படுத்தியதுடன், வழக்குத் தொடா்பான சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், மேலும் வழக்குரைஞா் கலியமூா்த்திக்கு சம்மன் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இச்செயலில் ஈடுபட்ட காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழக்குரைஞா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் நாகப்பட்டினம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். காா்த்திகேஷ் தலைமையில் 40 பெண்கள் உள்ளிட்ட 180 வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா். இதனால், நாகை மாவட்ட முதன்மை நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், போக்ஸோ நீதிமன்றம், மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றம் மற்றும் சாா்பு நீதிமன்றங்களில் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.