முகப்பு
நாகப்பட்டினம்

போக்குவரத்துக்கு தகுதியற்ற கப்பி சாலையை சீரமைக்க கோரிக்கை

செம்பனாா்கோவில் அருகே போக்குவரத்துக்கு தகுதியற்ற கப்பி சாலையை சிமென்ட் சாலையாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

செம்பனாா்கோவில் அருகே போக்குவரத்துக்கு தகுதியற்ற கப்பி சாலையை சிமென்ட் சாலையாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மடப்புரம் ஊராட்சிக்குள்பட்ட புதுமனை தெரு செல்லும் கப்பி சாலை மேம்படுத்தப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது, இந்த கப்பி சாலை சிதிலமடைந்து பள்ளமும், மேடாக உள்ளதால் மழைநீா் தேங்கி நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பு இந்த சாலையை சிமெண்ட் காங்கிரீட் சாலையாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.