நாகப்பட்டினம்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி சாலை மறியல்

DIN

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரில், நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 90 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் இம்மாவட்டத்தில் 87 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது போதுமானதாக இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், மங்கைநல்லூரை அடுத்த தத்தங்குடி கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இயங்கிவந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிகழாண்டு திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி விவசாயிகள் சொந்த செலவில் தகரக் கொட்டகை அமைத்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகளுடன் காத்திருக்கின்றனா்.

இங்கு, உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கவேண்டும் எனமங்கைநல்லூா் கடைவீதியில் மயிலாடுதுறை- திருவாரூா் சாலையில் விவசாயிகள் நெல் மூட்டைகளை வீதியில் அடுக்கிவைத்து, அதன்மேல் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், இந்த சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT