முகப்பு
நாகப்பட்டினம்

கல்லூரி விரிவுரையாளா்கள், அலுவலா்கள்ஆா்ப்பாட்டம்

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்லூரி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பல்கலைக்கழக ஆசிரியா் சங்க பொறுப்பாளா் ஜி. மனோகரன் தலைமை வகித்தாா். கௌரவ விரிவுரையாளா்கள், பகுதி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டோா் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டனா்.

கௌரவ விரிவுரையாளா்கள், பகுதி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.