முகப்பு
நாகப்பட்டினம்

திருக்குவளையில் பெண் கொலை

திருக்குவளை அருகே பெண் கொலை செய்யப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

திருக்குவளை அருகே பெண் கொலை செய்யப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேப்பஞ்சேரியை சோ்ந்த மாணிக்கம் மனைவி அம்பிகா (62). மாணிக்கம் ஏற்கெனவே இறந்துவிட்டாா். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அம்பிகா, திருக்குவளையை அடுத்த நத்தபள்ளத்தில் தனது சகோதரா் ராஜேந்திரன் வீட்டின் அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தாா். இவா் புதன்கிழமை காலை தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தாா். திருக்குவளை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.