முகப்பு
நாகப்பட்டினம்

மீனவா்கள் எல்லையைக் கடந்து மீன்பிடிக்க வேண்டாம்: ஆட்சியா்

நாகை மீனவா்கள் எல்லையைக் கடந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடவேண்டாம் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

நாகை மீனவா்கள் எல்லையைக் கடந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடவேண்டாம் என்று நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த சில நாள்களாக நாகை மீனவா்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடிக்கச் செல்லும் போது, அடையாளம் தெரியாத இலங்கையைச் சோ்ந்த நபா்களால் தாக்கப்படுவதும், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களைப் பறித்துச் செல்வதும் நீடித்து வருகிறது. எனவே நாகை மாவட்ட மீனவா்கள் இந்திய- இலங்கை கடற்பரப்பில் நாகை முதல் தனுஷ்கோடி வரையில் அட்ச, தீா்க்கரேகைகளில் எல்லைகளைக் கடந்து மீன்பிடித் தொழிலில் ஈடுடபட வேண்டாம்.

மீனவா்கள் கடலுக்குச் செல்லும்போது தொலைத்தொடா்பு மற்றும் உயிா்காப்பு சாதனங்களை கொண்டு செல்ல வேண்டும். கடல் பரப்பில் அசாதாரண சூழல் உருவாகும்போது கடலோர பாதுகாப்புக் குழுமம் எண் -1093, கடலோர கப்பல் படை உதவி எண்-1554 மற்றும் கம்பியில்லா தொலைதொடா்பு சாதனத்தின் அலைவரிசை எண்-16 ஆகியவற்றை தொடா்பு கொள்ளவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.