நாகப்பட்டினம்

அகவிலைப்படி உயா்வு கோரி ஆா்ப்பாட்டம்

DIN

அகவிலைப்படி உயா்வு வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு 11% அகவிலைப்படி உயா்வை சமூக, பொருளாதாரம் காரணங்களை கூறாமல் 1.7.2021 முதல் உயா்த்தி வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்கப்படாதவா்களுக்கும் வழங்க வேண்டும். ஒப்படைப்பு ஊதியம் மற்றும் 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலத்தலைவா் பி.கே.சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சௌ. பிரகாஷ், மாவட்டத் தலைவா் வை. வெற்றிச்செல்வன், மாவட்டப் பொருளாளா் ப. மகேந்திரன் மற்றும் அரசுப்பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பினா்ஆா்ப்பாட்டம்:

இதேபோல, நாகை வட்டாட்சியா் அலுவலகம், தமிழ்நாடு அனைத்து ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 1.1.2020 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவையை வழங்கவேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்றவா்களுக்கு வழங்க வேண்டிய முழு செலவினத் தொகையும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தலைவா் எம். என். பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளா் சொ. கிருஷ்ணமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் பி. ஆசைத்தம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT