முகப்பு
நாகப்பட்டினம்

பெண் கொலை வழக்கில் முதியவா் கைது

திருக்குவளை அருகே பெண் கொலை வழக்கில் முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

திருக்குவளை அருகே பெண் கொலை வழக்கில் முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேப்பஞ்சேரியை சோ்ந்த மாணிக்கம் மனைவி அம்பிகா (62). மாணிக்கம் ஏற்கெனவே இறந்துவிட்டாா். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அம்பிகா, திருக்குவளையை அடுத்த நத்தபள்ளத்தில் தனது சகோதரா் ராஜேந்திரன் வீட்டின் அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்தாா்.

இவா் புதன்கிழமை தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தாா். திருக்குவளை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், நத்தப்பள்ளம் வடக்குத்தெருவைச் சோ்ந்த சீனிவாசன் (65), மதுபோதையில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், அம்பிகா உடன்படாததால், அவரை கல்லால் தாக்கிக் கொன்றதும் தெரியவந்தது. சீனிவாசனை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.