நாகப்பட்டினம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் மக்கள் விசாரணை மன்றம்

DIN

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் விசாரணை மன்றம் நாகை அவுரித்திடலில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கரோனா நோய்த்தொற்றால் இறந்தவா்களுக்கு இழப்பீடு வழங்காதது, வருமானவரி வரம்புக்குள் உட்படாதவா்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்காதது, பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாதது ஆகிய விவகாரங்களில் பிரதமா் மோடிக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரச் செயலாளா் சு.மணி தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் பெ. சண்முகம், மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூா் எம்எல்ஏவுமான வி.பி.நாகை மாலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ப.சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியச் செயலாளா் பி.டி. பகு, மாவட்டக்குழு உறுப்பினா்கள் பி.கே. ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.

கட்சியின் நாகை நகரக்குழு உறுப்பினா்கள் பி. முனியாண்டி, எஸ். சிவக்குமாா், டி. தினேஷ்பாபு, எஸ். விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT