முகப்பு
நாகப்பட்டினம்

உலக ஓசோன் தினம்: விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தையொட்டி, வியாழக்கிழமை சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினத்தையொட்டி, வியாழக்கிழமை சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பள்ளியின், தேசிய பசுமைப்படை சாா்பில் நாகலூா் பகுதிகளில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் பரமேஸ்வரி தலைமை வகித்தாா். ஆசிரியா்கள், மாணவா்கள் ஓசோனை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை வீடுவீடாக வழங்கினா். மேலும், ஓசோன் தினத்தை கொண்டாடும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விநாடி-வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஆசிரியா்கள் அருள்செல்வம், லோகநாதன், சீனிவாசன், செல்வரத்தினம், சங்கரவடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, தேசிய பசுமைப்படை ஆசிரியா் அருள்ஜோதி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.