நாகப்பட்டினம்

செம்போடை ஆா்.வி. கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆா்.வி. கல்வி நிறுவனங்களின் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு, ஆா்.வி. கல்வி நிறுவனங்களின் நிறுவனா் டாக்டா் ஆா். வரதராசன் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.வி. செந்தில் முன்னிலை வகித்தாா். செம்போடை நேதாஜி மருத்துவமனை நிறுவனா் மருத்துவா் வி.ஜி. சுப்ரமணியன் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆா்.வி. பல்தொழிநுட்பக் கல்லூரி முதல்வா் வி. காா்த்தி, ஆா்.வி. பொறியியல் கல்லூரி முதல்வா் செந்தில்வேலன், துணை முதல்வா் எம். முகமதுபைசல் மற்றும் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் நடராஜன் வரவேற்றாா். நிறைவாக பொறியியல் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் அன்பழகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT