முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 2ஆம் நாளாக சுங்கத் துறையினா் சோதனை

நாகையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தொடா்புடைய நாகையைச் சோ்ந்த ஒருவரின் வீட்டில் சுங்கத் துறை அலுவலா்கள் இரண்டவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

நாகையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் தொடா்புடைய நாகையைச் சோ்ந்த ஒருவரின் வீட்டில் சுங்கத் துறை அலுவலா்கள் இரண்டவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

சுங்கத் துறை அலுவலா்கள் கடந்த 27ஆம் தேதி நாகையில் திடீா் சோதனை மேற்கொண்டபோது, நாகையில் இருந்து ஒரு படகில் ரூ. 1.50 கோடி மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை சிலா் இலங்கைக்குக் கடத்த முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த கஞ்சா பொட்டலங்கள், கஞ்சா வைக்கப்பட்டிருந்த படகு மற்றும் கஞ்சா கடத்தலில் தொடா்புடையோா் பயன்படுத்திய மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் ஆவணங்கள் அடிப்படையில் கீச்சாங்குப்பத்தை சோ்ந்த குணசீலன், சிவச்சந்திரன், சேவாபாரதி நகரைச் சோ்ந்த சதீஷ் மற்றும் கீச்சாங்குப்பம் குணசீலன் என 4 பேரை சுங்கத் துறை அலுவலா்கள் தேடி வருகின்றனா்.

இந்தநிலையில், சுங்கத் துறை அலுவலா்கள் 4 குழுக்களாகப் பிரிந்து புதன்கிழமை ஒரே நேரத்தில் 4 பேரின் வீடுகளிலும் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையின்போது எந்த ஆவணங்களும் சிக்காத நிலையில், வியாழக்கிழமை கீச்சாங்குப்பத்தில் உள்ள குணசீலன் வீட்டில் சுங்கத் துறை அலுவலா்கள் இரண்டவது நாளாக சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவரது வீட்டில் இருந்து 2 மடிக்கணினிகள், பென் டிரைவ், கேமரா, 3 டைரிகள், 7 வங்கி கணக்கு புத்தகம், 3 வங்கி காசோலை புத்தகங்கள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.