முகப்பு
நாகப்பட்டினம்

மின்னல் தாக்கி பெண் பலி

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கியதில், வயலில் களைபறித்துக் கொண்டிருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கியதில், வயலில் களைபறித்துக் கொண்டிருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, வடமழை மணக்காடு பகுதியில் நெல் சாகுடி வயலில் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி மாரியம்மாள் (43), மின்னல் தாக்கி மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். பரிசோதனையில், அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினா், கரியாப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →