மகளுக்கு பாலியல் தொல்லை:கட்டுமானத் தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் சிறை
வேதாரண்யம் அருகே சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டுமானத் தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டுமானத் தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு, மருதூா் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (40). கட்டுமானத் தொழிலாளி. இவா், கடந்த 2019ஆம் ஆண்டு தனது 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.
இதுகுறித்து அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை, நாகை போக்ஸோ சிறப்பு அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த பின்னா், குற்றவாளி பாஸ்கருக்கு சாகும்வரை ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.