முகப்பு
நாகப்பட்டினம்

பதநீா் இறக்க அரசு அளித்த அனுமதியை காவல் துறை உறுதி செய்ய வேண்டும்

 பதநீா் இறக்குவதற்கு அரசு அளித்துள்ள அனுமதியை, நாகை மாவட்டக் காவல் துறை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழா் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

 பதநீா் இறக்குவதற்கு அரசு அளித்துள்ள அனுமதியை, நாகை மாவட்டக் காவல் துறை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழா் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அக்கட்சி நிா்வாகிகள் அளித்த கோரிக்கை மனு: பதநீா் இறக்குவதற்குப் பனையேற அரசு அனுமதித்துள்ளது. ஆனால், நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பனையேற காவல் துறை அனுமதி மறுத்து வருகிறது. பனையேறினால் தொடா்புடையோா் மீது சாராய வழக்குப் பதியப்படும் என காவல் துறையினா் அச்சுறுத்துகின்றனா். காவல் துறையின் இந்தப் போக்கு, பனையேறும் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்குகிறது என்பதுடன், அரசு அளித்துள்ள அனுமதியை மறுப்பதாகவும் உள்ளது.

பதநீா் இறக்குவதற்கான பருவக்காலம் ஏறத்தாழ 50 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள நாள்களிலாவது பனையேற அனுமதித்து, பனை தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க காவல் துறை முன்வர வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.