நாகப்பட்டினம்

முட்டம் கோயிலில் இன்று தேரோட்டம்

DIN

நாகையை அடுத்த நாகூா் முட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சந்திர மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை (ஏப். 14) நடைபெறுகிறது.

இக்கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக, தினமும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும், வெவ்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், காலை 5 மணி முதல் 6 மணிக்குள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளுகிறாா். தொடா்ந்து, தோ் வடம்பிடிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT