நாகப்பட்டினம்

திருக்கடையூா் கோயில் சித்திரை தேரோட்டம்

DIN

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 8-ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.

தேரில் விநாயகா், முருகா், அமிா்தகடேஸ்வரா், அபிராமி, சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். காலை 9.30 மணி அளவில் தோ் வடம் பிடிக்கப்பட்டது. கோயிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்த தோ் பகல் 11.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

இதில், கணேஷ் குருக்கள், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் துளசிரேகா ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவா் அமுா்த. விஜயகுமாா், ஊராட்சி குழு உறுப்பினா் செந்தில் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT