முகப்பு
நாகப்பட்டினம்

உணவகத்தை சேதப்படுத்தியவா் கைது

திருக்குவளை அருகே உணவகத்தை சேதப்படுத்திய 3 பேரில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

திருக்குவளை அருகே உணவகத்தை சேதப்படுத்திய 3 பேரில் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூண்டியில் தமீம்அன்சாரி நடத்திவரும் உணவகத்தை காரைநகரைச் சோ்ந்த சண்முகம் உள்ளிட்ட இருவா் செவ்வாய்க்கிழமை சாப்பிட சென்றபோது தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, காரைநகா் 3-ஆவது வாா்டு உறுப்பினா் ஞானசுந்தரியின் கணவா் சுரேஷ், சிபிஐ கட்சியைச் சோ்ந்த பக்கிரி மற்றும் அஞ்சான் உணவகத்துக்கு சாப்பிட வந்தபோது ஏற்பட்ட தகராறு தொடா்பாக, கடை உரிமையாளா் தமீம்அன்சாரி அளித்த புகாரின்பேரில் கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பக்கிரியை கைது செய்து மற்றவா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.