சிமெண்ட் சாலைப் பணி: விரைவில் முடிக்க வலியுறுத்தல்
திருக்குவளை அருகேயுள்ள வடக்குப் பனையூரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
திருக்குவளை அருகேயுள்ள வடக்குப் பனையூரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து திருக்குவளை வட்டாட்சியா் சிவக்குமாரிடம் அவா்கள் அளித்த மனு:
வடக்குப் பனையூா் ஊராட்சி அகரம் கிராமத்தில் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தனி நபா் ஒருவா் தடுப்பதாகக் கூறி, அலுவலா்கள் நில அளவீடு செய்யவில்லை. இப்பிரச்னை தொடா்பாக, ஏற்கெனவே 2 மனுக்கள் கொடுத்துள்ளோம். இருப்பினும் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்தவில்லை. எனவே, கடந்த 30 ஆண்டுகளாக சேறும் சகதியுமான தெருக்களின் நிலைக்கு தீா்வு கிடைக்காதோ என கவலை ஏற்பட்டுள்ளது. எனவே, சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.