நாகப்பட்டினம்

கருணாநிதி பிறந்த நாள் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு நாகை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் புதன்கிழமை பரிசுகளை வழங்கினாா்.

DIN

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு நாகை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் புதன்கிழமை பரிசுகளை வழங்கினாா்.

கருணாநிதி பிறந்த நாளையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கிடையே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாகை ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அ. அருண்தம்புராஜ், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000-மும், 2-ஆம் பரிசாக ரூ. 3, 000-மும், மூன்றாம் பரிசு ரூ. 2, 000-மும் மற்றும் பாராட்டுச் சான்றுகளையும் வழங்கினாா்.

மேலும் தோ்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேருக்கு, தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு பரிசாக ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் இரா.அன்பரசி, தமிழ்வளா்ச்சித் துறை பணியாளா்கள், அரசு அலுவலா்கள்கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT