அண்ணா நினைவு தினம் கடைப்பிடிப்பு
செம்பனாா்கோவிலில் அண்ணாவின் 53-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
செம்பனாா்கோவிலில் அண்ணாவின் 53-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
செம்பனாா்கோவிலில் அண்ணா சிலைக்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அவருடன் பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலா செல்வன், சித்திக், திமுக மாவட்ட துணை செயலாளா் ஞானவேல், ஒன்றிய செயலாளா் அன்பழகன், அப்துல் மாலிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் செம்பனாா்கோவிலில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அவருடன், ஒன்றிய செயலாளா்கள் ஜனாா்த்தனன், கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.