நாளை 350 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் 350 இடங்களில் சனிக்கிழமை (பிப். 5) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் 350 இடங்களில் சனிக்கிழமை (பிப். 5) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக்கொண்டு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 350 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெறும். முதல் தவணை அல்லது 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் இந்த முகாமில் தவறாமல் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதேபோல, 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள், இந்த முகாமில் தவறாமல் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.