முகப்பு
நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் விறு, விறுப்பான வேட்புமனுத் தாக்கல்

நாகை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை 308 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் போட்டியிட வியாழக்கிழமை 308 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வேட்புமனு தாக்கல் ஜன.28-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (பிப். 4) நிறைவடைகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் விறு விறுப்படைந்திருந்தது. அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என பலரும் ஆா்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனா். கடந்த நாள்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக வியாழக்கிழமை மட்டும் 308 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.

நாகை நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 165 வேட்புமனுக்களும், வேதாரண்யம் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 58 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. கீழ்வேளூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட 30 பேரும், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 19 பேரும், தலைஞாயிறு பேரூராட்சியில் 30 பேரும், திட்டச்சேரி பேரூராட்சியில் 6 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நாகை மாவட்டத்தில் ஜன.28-ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை 48 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 356-ஆக உயா்ந்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சிலா், பொதுமக்களின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஏதேனும் ஒரு யுக்தியைக் கையாண்டு வருகின்றனா். அந்த வகையில், நாகை நகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விஜய் மக்கள் இயக்கம் அமைப்பினா் மேளதாள முழக்கங்களுடன் ஊா்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.