நாகப்பட்டினம்

நாகை - திருச்சி முன்பதிவு இல்லாதவிரைவு ரயில் சேவை தொடக்கம்

நாகை - திருச்சி இடையே முன்பதிவு இல்லாத விரைவு ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது.

DIN

நாகப்பட்டினம்: நாகை - திருச்சி இடையே முன்பதிவு இல்லாத விரைவு ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது.

கரோனா பொதுமுடக்கத்துக்கு முன், காரைக்கால் - திருச்சிக்கு தினமும் காலை நேரத்தில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. காரைக்காலில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் காலை 7.10 மணிக்கு நாகையை அடையும். நாகையில் இருந்து காலை 7.20 மணிக்குப் புறப்பட்டு, காலை 11.20 மணிக்கு திருச்சியை அடையும்.

கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தடைப்பட்டிருந்த இந்த ரயில் சேவை, நாகை - திருச்சி முன்பதிவு இல்லாத விரைவு ரயில் சேவையாக பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதன்படி, நாகை - திருச்சி (எண் 06839) முன்பதிவு இல்லாத பயணிகள் விரைவு ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சி, நாகை ரயில் நிலையத்தில் புதன்கிழமை காலை, நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது, ரயில் நிலைய மேலாளா், லோகோ பைலட், உதவி லோகோ பைலட் மற்றும் காவலா்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. பின்னா், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்திய வா்த்தக தொழிற் குழும நிா்வாகிகள் சலிம்முதின், கே.ஏ. எஸ். பகுருதீன், பொருளாளா் கே. சேகா், முன்னாள் நிா்வாகிகள் என். சந்திரசேகரன், அ.சி.நிஜாம்சேட், நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளா் கோ. அரவிந்குமாா், அமைப்புச் செயலாளா் எம். பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT