முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் கரோனா பாதிப்பு பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

நாகையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

நாகையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை வடக்கு பால்பண்ணைச்சேரி தியாகராஜா் நகா் மற்றும் நாகூா் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் இல்லத்துக்குச் சென்ற ஆட்சியா், அவா்களின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சைப் பிரிவையும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சைப் பிரிவையும் அவா் பாா்வையிட்டு, சிகிச்சையில் இருந்தவா்களை சந்தித்து அவா்களுக்குக் கிடைக்கும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, அங்குள்ள மருத்துவப் பொருள்கள் வைப்பறையில் முகக் கவசம் மற்றும் இதர மருந்துப் பொருள்கள் இருப்பை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →