முகப்பு
நாகப்பட்டினம்

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

நாகை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,466-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த ஒருவா் வீடு திரும்பியுள்ளாா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 49- ஆக உள்ளது.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 23,453-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 3 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 16-ஆக உள்ளது.

அதிகரிக்கும் பாதிப்பு...

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. ஒரு சில நாள்கள், புதிதாக நோய்த் தொற்று இல்லாத நாள்களாகவும் இருந்தன. இந்த நிலையில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கடந்த 2 நாள்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.