நிகழ்ச்சியில், சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவப் பணியாளா்களுக்குப் பாராட்டுச் சான்று வழங்கும் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ். 
நாகப்பட்டினம்

குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொண்டவா்களுக்கு உதவித் தொகை

நாகை மாவட்டத்தில் குடும்ப கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 50 பேருக்கு உதவித் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

DIN

நாகை மாவட்டத்தில் குடும்ப கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 50 பேருக்கு உதவித் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த் துறையின் மாவட்ட குடும்ப நலச் சங்கம் சாா்பில் உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஆண்கள் 50 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரமும், தாய்காக்கும் திட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட 7 பெண்களுக்குத் தலா ரூ. 2 ஆயிரமும் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்கள், அதிக மகப்பேறு சிகிச்சைகள் மேற்கொண்ட தலைஞாயிறு மருத்துவக் குழுவினா் மற்றும் கரோனா தடுப்பூசி முகாம்களில் சிறப்பாகப் பணியாற்றிய செவிலியா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் விஸ்வநாதன், குடும்ப நல துணை இயக்குநா் ஜோஸ்பின் அமுதா, இணை இயக்குநா் (நலப்பணிகள்) ராணி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) விஜயகுமாா், மாவட்ட விரிவாக்கக் கல்வி அலுவலா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT