நாகையில் 163, மயிலாடுதுறையில் 151 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் புதிதாக 163 பேருக்கும், மயிலாடுதுறையில் 151 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 163 பேருக்கும், மயிலாடுதுறையில் 151 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 22,396-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 52 போ் வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 720- ஆக உள்ளது.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 24,408-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 65 போ் வீடு திரும்பியுள்ளனா். 688 போ் சிகிச்சையில் உள்ளனா்.
அதிகரிக்கும் பாதிப்பு: இதற்கிடையில், மயிலாடுதுறை மாவட்டம் கரோனா பரிசோதனையில் பின்னடைவும், பாதிப்பில் முன்னிலையும் பெற்று, டெல்டா மாவட்டங்களில் மிக அதிக சதவீத கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டமாக உள்ளது.