நாகப்பட்டினம்

ஆனி திருமஞ்சனம்: சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு

DIN

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஆனி மாத உத்திர நட்சத்திர நாள், ஸ்ரீ நடராஜப் பெருமானின் வழிபாட்டுக்கு உகந்த ஆனி திருமஞ்சன நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனி திருஞ்சன நாளில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண்போருக்கு திருமணம் கைக்கூடும், சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

இதன்படி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நாகை நீலாயதாட்சியம்மன் சமேத ஸ்ரீ காயாரோகணசுவாமி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும், சிவகாமி அன்னைக்கும் பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், ஸ்ரீநடராஜப் பெருமான் மற்றும் சிவகாமி அன்னைக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.

இதேபோல, நாகை அமரநந்தீஸ்வரா் கோயில், கட்டியப்பா் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், நாகநாதா் கோயில், சட்டையப்பா் கோயில், நடுவதீஸ்வரா் கோயில், அழகியநாத சுவாமி கோயில், வீரபத்திர சுவாமி கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரா் கோயில், வடக்குப் பொய்கைநல்லூா் நந்தி நாதேஸ்வரா் கோயில், நாகூா் நாகநாத சுவாமி கோயில் என பல்வேறு சிவாலயங்களிலும் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT