நாகப்பட்டினம்

சீர்காழி: கடத்திவரப்பட்ட 2000 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

சீர்காழியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்திவரப்பட்ட 2 ஆயிரம் காரைக்கால் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

சீர்காழி: சீர்காழியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடத்திவரப்பட்ட 2 ஆயிரம் காரைக்கால் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிக்கு காரைக்காலில் இருந்து அதிக அளவில் பாண்டிச்சேரிக்கு மதுபானங்கள் கடத்தி வருவதாக காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்கிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்  சீர்காழி அடுத்த வள்ளுவக்குடி சாலையில் சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது அவ்வழியாக வந்த சொகுசு கார் மற்றும் அதனை பின்தொடர்ந்து வந்த நான்கு இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் மடக்கி பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது காரில் 40 மூட்டைகளில் காரைக்காலில் இருந்து 2 ஆயிரம் மதுபான  பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மயிலாடுதுறை பாண்டூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சீர்காழி கூத்தியம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். 

மேலும் தப்பிியோடி 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் 2000 மதுபான பாட்டில்கள்  உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 

கார், இருசக்கர வாகனம், மதுபானங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை காவல்துறையினர் காவல் நிலைய  வெளி வளாகத்தில் கொட்டி  அழித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT