நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் இந்திக்கு எதிராக திரளும் வங்கி வாடிக்கையாளர்கள்

DIN

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே வங்கிக் கிளையில் தற்போது பணியாற்றும் ஊழியர்களை மாறுதல் செய்யவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடந்த பந்தல் அமைத்து ஆயத்தமாகி வருகின்றனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் தற்போது பணியாற்றும் ஊழியர்களை மாறுதல் செய்யவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடந்த பந்தல் அமைத்து ஆயத்தமாகி வருகின்றனர்.

ஆயக்காரன்புலம்  கடைவீதியில் இன்டியன் ஓவர்சீர் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தமிழில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களாக உள்ளனர்.

இதனால், கிராமத்தினராக உள்ள வாடிக்கையாளர்களுக்கு மொழிப் பிரச்னை இல்லாமல் செல்கிறது. ஆனால், அருகாமையில் உள்ள வாய்மேடு, வேதாரண்யம் ஆகிய இடங்களில் செயல்படும் வங்கிக் கிளைகளில் முக்கிய பணி வகிப்பவர்கள் இந்தி பேசுபவர்களாக உள்ளனர். இதனால், வாடிக்கையாளர்கள் மொழி புரிதலில் பிரச்னையோடு அவதியுறுகின்றனர்.

இந்த நிலையல், ஆயக்காரன்புலம் ஐஓபி கிளையில் இருப்பவர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இடங்களுக்கு தமிழ் தெரியாமல் இந்தி பேசுபவர்கள் வந்துவிட்டால் மற்ற வங்கிக் கிளைகளைப் போல அவதியுற வேண்டும்  என வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

இதனால், சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய பந்தல் அமைத்து ஆயத்தமாகி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT