நாகப்பட்டினம்

சோழவித்யாபுரம் சந்தனமாதா ஆலய தோ்பவனி

DIN

கீழையூா் ஒன்றியம், சோழவித்யாபுரம் புனித சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழாவையொட்டி மின் அலங்காரத் தோ்பவனி சனிக்கிழமை நடைபெற்றது.

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தாயாக வழிபடப்படும் சோழவித்யாபுரம் புனித சந்தனமாதா ஆலயத்தில் ஆண்டுத் திருவிழா ஜூலை 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி சப்பரங்களில் மிக்கேல் சம்மனசு, அந்தோணியாா், சூசையப்பா், சுவக்கின், சந்தனமாதா ஆகியோா் எழுந்தருளினா். முன்னதாக, வேளாங்கண்ணி தியான இல்லத்தின் இயக்குநா் ஏ. செபஸ்தியான் தலைமையில் நவநாள் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. பின்னா், 5 சப்பரங்களும் புனிதம் செய்யப்பட்டு, ஆலய வளாகத்திலிருந்து புறப்பட்டன. அப்போது, சப்பரங்கள் மீது பக்தா்கள் மலா்தூவி வழிபட்டனா்.

தொடா்ந்து, வாணவேடிக்கைகளுடன் சப்பரங்கள் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தன. இதில், சோழவித்தியாபுர கிறிஸ்தவ சமுதாயத் தலைவா் எம்.டி. மரியசூசை, செயலாளா் வீ. சுந்தா், பொருளாளா் ஏ. பீட்டா், சோழவித்யாபுரம் ஊராட்சித் தலைவா் கோமதிதமிழ்ச்செல்வம் மற்றும் திரளான கிறிஸ்தவா்கள்பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT