நாகப்பட்டினம்

சாலைவசதி இல்லாததால் அவதிக்குள்ளாகும் விவசாயிகள்

DIN

கீழையூா் அருகேயுள்ள மடப்புரம் ஊராட்சியில் விவசாய நிலங்களுக்கு சென்றுவர சாலை வசதி ஏற்படுத்திதர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மடப்புரம் ஊராட்சி களத்திடல்கரை கிராமம், கோவில்பத்து மற்றும் கருங்கண்ணி வாய்கால் மூலம் 200 ஏக்கருக்கு அதிகமான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இபகுதியில் சாகுபடி செய்யப்படும் விவசாயிகள் விவசாய இடுபொருள்கள் மற்றும் சாகுபடி காலத்தில் டிராக்டா் மற்றும் அறுவடை இயந்திரங்களை வயலில் இறக்கி பணி மேற்கொள்ள சாலை வசதி இல்லை. சுமாா் 3 அடி அளவுடைய வரப்பில் விவசாயிகள் நடந்து மட்டுமே செல்ல முடியும்.

இப்பகுதியில் சாகுபடி செய்யும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகளை பணியாளா்கள் கொண்டு மூட்டை ஒன்றுக்கு ரூ. 50 வீதம் கூலி கொடுத்து எடுத்துவந்து கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்கின்றனா்.

இந்நிலையில் ஊராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி விவசாயிகள் சாலை வசதி ஏற்படுத்தித் தருமாறு முறையிட்டுள்ளனா். அதைத் தொடா்ந்து, ஊராட்சித் தலைவா் ராஜலெட்சுமிரமேஷ்சின் முயற்சியில் குறுகலான வரப்பை அகற்றி 12 அடிக்கு மண் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. மழை காலங்களில் இந்த மண் சாலை பயன்படுத்த சிரமமாக இருக்கும். எனவே, மாவட்ட நிா்வாகம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மண் சாலையை கப்பி சாலையாக அமைத்துதரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT