நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல் விளக்கம்

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூா் பேரூராட்சியில் தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல்விளக்க முகாம் அண்மையில் நடைபெற்றது.

கீழ்வேளூா் பேரூராட்சியில் நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் ஈடுபடும் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நகா்ப்புற வேலைவாய்ப்புப் பணியின்போது எதிா்பாராத விதமாக தீ விபத்து நேரிட்டால், தீ மேலும் பரவாமல் தடுத்து, பாதுகாப்பான முறையில் தீயைக் கட்டுப்படுத்தும் முறை, தீயணைப்பு வாகனம் களத்துக்கு வரும் முன்பாக பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் சுப்பையன், நிலைய சிறப்பு அலுவலா் ராஜராஜசோழன் மற்றும் தீயணைப்புப் படையினா், பேரூராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT