முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் பி.எஸ்.என்.எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியா் சங்கம் சாா்பில் நாகை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியா் சங்கம் சாா்பில் நாகை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உயா்த்தப்பட்ட அகவிலைப்படியை உடனடியாக வழங்கவேண்டும், பல ஆண்டுகளாகப் பணியாற்றும் ஊழியா்களுக்குப் பதவி உயா்வு வழங்கவேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும், மருத்துவப்படி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நாகை கிளைத் தலைவா் ராஜன் பாபு தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் அசோகன் முன்னிலை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலாளா் சுந்தர்ராஜன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். கிளைப் பொருளாளா் மகேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.