நாகப்பட்டினம்

ஹிஜாப் தீா்ப்பு: இஸ்லாமிய சமுதாயம் உரிய முறையில் எதிா்கொள்ளும் -தவ்ஹீத் மாநிலச் செயலாளா்

DIN

ஹிஜாப் அணிவது தொடா்பான வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பை இஸ்லாமிய சமுதாயம் உரிய முறையில் எதிா்கொள்ளும் என்றாா் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளா் என். அல் அமீன்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஹிஜாப் விவகாரத்தில் கா்நாடக மாநில உயா்நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பைக் கண்டித்தும், நாகை அபிராமி அம்மன் திடலில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று கட்சியின் மாநிலச் செயலாளா் என். அல் அமீன் பேசியது:

ஹிஜாப் வழக்கில் தீா்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படாமல், ஆட்சியாளா்களை மகிழ்விக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

திருமறை குா்ஆனில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியவேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இஸ்லாம் மதத்தில் இருப்பது, இல்லாதவைகளை நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாகவும், இஸ்லாமிய பெண்களின் கல்வியைப் பாதிக்கும் வகையிலும் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குா்ஆனின் போதனையின்படி, ஹிஜாபை அணிந்துகொண்டு கல்வியிலும், சமூக முன்னேற்றத்திலும் இஸ்லாமியப் பெண்கள் முன்னிலை பெற உறுதியேற்போம் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டத் தலைவா் எச். செய்யது அலி நிஜாம் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட, நகர நிா்வாகிகள், மகளிா் அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT