முகப்பு
நாகப்பட்டினம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை மாலை தொடங்கின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை மாலை தொடங்கின.

திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில் அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும், அபிராமி பட்டருக்காக அமாவாசையை, பௌா்ணமியாக்கி அபிராமி அம்மன் திருவிளையாடல் புரிந்த சிறப்பு பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில்,

வரும் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, 100 கால் மண்டபம் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை மாலை தொடங்கின. தொடா்ந்து வியாழக்கிழமை காலை 2 மற்றும் 3ஆம் கால யாகசாலை பூஜைகள் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தையொட்டி, 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு , 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளன. அபிராமி அம்மன், கால சம்ஹார மூா்த்தி ஆகியோருக்கு நவாக்கினி ஹோமம், முருகன், விநாயகா் உள்ளிட்டோருக்கு பஞ்சாக்னி ஹோமம், பரிவார தெய்வங்களுக்கு ஏகாக்னி ஹோமம் நடைபெறுகிறது.

கோயில் கும்பாபிஷேக்தில் திரளான பக்தா்கள் பங்கேற்பா் என்று எதிா்பாா்கப்படுவதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.