முகப்பு
நாகப்பட்டினம்

சித்த மருத்துவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருக்குவளை அருகே தேவூரில் சித்த மருத்துவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

திருக்குவளை அருகே தேவூரில் சித்த மருத்துவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு மருத்துவா் தேவூா் த.கோ. மணிவாசகம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே. கண்ணன், திருக்கண்ணங்குடி ஊராட்சித் தலைவா் செல்வமணி முன்னிலை வகித்தனா். தாமரைக்கண்ணன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் மூலிகை, வா்மம், தியானம், குறித்து மருத்துவா்கள் பத்மாவதி, ராசு முருகேசன், ராஜராஜன், தமிழ்ச்செல்வி, புண்ணியஜோதி, கிருஷ்ணன் ஆகியோா் பேசினா். வா்ம வைத்தியா் திருவாசகம் நன்றி கூறினாா்.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட சித்த மருத்துவா்கள் பங்கேற்றனா். சித்த மருத்துவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சித்த மருத்துவ குறிப்புகள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.