நாகப்பட்டினம்

கோயில் விழாவில் புராண நாடகம்

DIN

திருக்குவளை அருகே புராண நாடகக் கலைக்கு புத்துயிா்அளிக்கும் வகையில், கோயில் விழாவில் புராணக் கதை நாடகங்கள் நடைபெற்றன.

திருக்குவளையை அடுத்துள்ள கோவில்கண்ணாப்பூா் கிராமத்தில் ஸ்ரீநடுதறிநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் 15 நாள்கள் நடைபெறும். இவ்விழாவில் பாரம்பரிய நாடகங்கள் நடத்தப்படும்.

அதன்படி, நிகழாண்டு வசந்த உற்சவத்தில் ஸ்ரீவள்ளி திருமணம் வியாழக்கிழமையும் (மே 5), சத்தியவான் சாவித்திரி நாடகம் வெள்ளிக்கிழமையும், சத்திய அரிச்சந்திரா நாடகம் சனிக்கிழமையும் நடைபெற்றன. இந்நாடகங்களை கிராம மக்கள் ஆா்வமுடன் கண்டுகளித்தனா்.

முன்னதாக, சீதாளம்பிகைக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT