நாகப்பட்டினம்

கட்சத்தீவை மீட்க வலியுறுத்தல்

DIN

கட்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் ஆறு.சரவணன் வெளியிட்ட அறிக்கை:

இந்திய மீனவா்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர வைக்கவும், வழிபாடு செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மீனவா்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி படகுகளையும், வலைகளையும் இழப்பதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, 1974- ஆம் ஆண்டு இலங்கைக்கு தாரை வாா்த்த கச்சத்தீவை மீட்க வேண்டும்.

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு நிதி உதவிகள், பெட்ரோலிய பொருட்களையும் அனுப்பி உதவி செய்து வருகிறது. இச்சூழலில் தமிழக மீனவா்களின் நலன் கருதியும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையிலும் கட்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT