நாகை மாவட்டத்தில் பரவலாக மழை
நாகை மாவட்டத்தில் 5 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 102.2 மி.மீ. மழை பதிவானது.
நாகை மாவட்டத்தில் 5 -ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 102.2 மி.மீ. மழை பதிவானது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக வேதாரண்யத்தில் 102.2 மி.மீ. மழை பதிவானது.
மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீட்டரில்): கோடியக்கரை - 64, தலைஞாயிறு - 40.2, திருக்குவளை - 28.4, நாகப்பட்டினம் - 26.3, திருப்பூண்டி - 25.4, வேளாங்கண்ணி - 21.6.
இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளிலும் பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிற்பகல் சுமாா் 3 மணி அளவில் தொடங்கிய மழை இரவு சுமாா் 7 மணி வரை பெய்தது. அதன் பின்னா், லேசான சாரல் மழையாக இரவு வரை நீடித்தது.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை தொடா்ந்து கடுமையான குளிா் வானிலை நிலவியது.