நாகப்பட்டினம்

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திட்டச்சேரி பேருந்து நிலையம் அருகே அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளா் விக்னேஷ் தலைமை வகித்தாா். திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலாளா் இரா. ராதாகிருட்டிணன் வரவேற்றாா். நாகை நகரச் செயலாளா் தங்க கதிரவன், தெற்கு ஒன்றியச் செயலாளா் பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஒ.எஸ். மணியன் எம்எல்ஏ சிறப்புரையாற்றினாா்.

தலைமை கழக பேச்சாளா்கள் அன்பழகன், தஞ்சை மதியழகா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். திட்டச்சேரி பேரூா் செயலாளா் அப்துல் பாசித் நன்றி கூறினாா். முன்னதாக, மொழிப்போா் தியாகிகளின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT