மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா. ராமச்சந்திரன்.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, பூம்புகாா் சுற்றுலா தலம் மேம்படுத்தும் பணிகள், திருக்கடையூரில் உள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் பயணிகள் தங்கும் அறை, உணவு வழங்கும் இடம், கட்டண விவரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை ரூ.3 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. பூம்புகாா் கலைக்கூடம் ரூ.23.60 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 6 மாதங்களில் முடிவடையும். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் 6.20 லட்சம் போ் வந்துள்ளனா்.
தரங்கம்பாடியில் உள்ள ஆளுநா் மாளிகை அடுத்த ஆண்டில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரங்கம்பாடியில் இயங்கி வந்த தமிழ்நாடு தங்கும் விடுதி சீரமைத்து மீண்டும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.